Saturday, November 10, 2012

Spring, Summer, Fall, Winter... and Spring காலமும், மனிதனும் -2

மற்றுமொரு விடுமுறை  தினத்தில் உங்களை சந்திப்பதில் தேவ்ஹால்சிங் பெருமகிழ்ச்சி அடைகிறான்.

 உங்களில் சிலர் (என்ன நம்ம பதிவையும் சில பேர் படிக்கிறாங்களா ?) இந்த படத்தை  பார்த்திருக்கலாம் . உங்கள் பின்னூட்டம் வரவேற்க்கப்படுகிறது  (யாருமே இல்லாத ஊருல நான் ஏன் டீயாத்துரேன் ?).


Fall (இலையுதிர் காலம்)

ஒரு சில வருடங்களுக்கு பிறகு குரு ஒரு பத்திரிக்கை துணுக்கில் ஒரு கொலைகாரனை பற்றிய செய்தியை பார்த்து பெருமூச்சி விடுகிறார். (உங்கள் கணிப்பு சரிதான் அவன் அந்த சீடனேதான்). அவனுக்கு எது வீடு அவரை தேடி வந்துவிடுகிறான்.  அவன் தண்டனையை ஏற்கும் நிலைக்கு வந்தவுடன் அவனை கடுமையாக தண்டித்து அவன் கோபம் முழுவதையும் குறைக்க ஒரு வழி செய்கிறார். 


தரையில் கொரிய மொழியில் (தேவ்ஹால்சிங் உனக்கு கொரிய மொழியெல்லாம் தெரியுமா?) எதையோ எழுதி அதை செதுக்க சொல்கிறார். போலிசும் வந்துவிடுகிறது. அவன் செதுக்கிய எழுத்துகளை போலிசும் சேர்ந்து செதுக்குகிறது. அவனை போலீஸ் அழைத்து சென்ற பிறகு குரு தன் வாழ்வை முடித்துக் கொள்கிறார்.

winter (குளிர்க்காலம்)
   சீடன் விடுதலையாகி புது குருவகிறான். அவனது விட்டிற்கு வரும் ஒரு  பெண் தன் மகனை அங்கேயே விட்டுசெல்கிறாள். அப்போது அவள் எதிர்பாராமல் இறந்தும்விடுகிறாள் . தான் சிறுவயதில் விலங்குகளை துன்பப்படுத்தியதால், அந்த பாவங்களை விலக்க தன மீது கல்லை கட்டி கொண்டு மலை உச்சியை அடைந்து தன் பாவங்களை போக்கிக்கொள்ளகிரான்.

 spring (மீண்டும்)

புது சீடன் ஆமையை தலைகீழாக புரட்டி போடுவதை, மலை உச்சியில் உள்ள
புத்தர் சிலை பார்த்துகொண்டிருக்க படம் முடிவடைகிறது.


நீங்கள் இந்திய சினிமாவை பார்த்து அலுப்படைந்திருந்தால் இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தை உங்களுக்கு தரும். kim-ki-duk இன் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று.


எனது அடுத்த பதிவு 'BOLT' என்கிற படத்தை பற்றியது .  டிரைலரை  பார்க்க இங்கே சொடுக்கவும் .









Friday, November 9, 2012

Spring, Summer, Fall, Winter... and Spring காலமும், மனிதனும் -1



pondicherry university-ல்  படிக்கும் முன்பு நானும் இந்திய சினிமா என்னும் கிணற்றில் வாழும் தவளையாக இருந்தேன் . நான் pondicherry university-ல் இருந்த இரண்டு வருடங்களில் நிறைய உலக  சினிமா பார்க்கும் வாய்ப்பு கிட்டியது . school of performing arts துறையில் எல்லா வெள்ளிகிழமையும் ஒரு படம் போடுவார்கள். அந்த துறையில் கொளரவ விரிவுரையாளராக  பணியாற்றிய திரு. ரவீந்தரன் சாரும், ரெஜின் ரோஸ் என்ற மாணவரும் சேர்ந்து இதை நடத்தினார்கள் . நான அன்றிலுருந்து நல்ல படங்களை மட்டுமே பார்க்க ஆரம்பித்தேன். 10-லிருந்து 15 பேர் மட்டுமே அந்த படங்களை பார்க்க செல்வோம். அந்த வகையில் நான் இந்த கட்டுரையின் மூலம் நன்றி கூறிகொள்கிறேன்.

இந்த படத்தின் இயக்குனரான கொரியாவை சேர்ந்த கிம்-கி-டுக் என்னை கவர்ந்த இயக்குனரில் ஒருவர்.அவர் படம் எல்லாவற்றிலும் அதீத வன்முறை இருக்கும் இருந்தாலும் அவரின் திரைகதைக்காகவும், இந்த படத்தை நான் பலமுறை பார்த்தேன். வாய்ப்பிருந்தால் இவரை  பற்றி ஒரு பதிவு எழுதாலாம் என்றிருக்கிறேன் .

             நான் வாரம் தவறாமல் இந்த படங்களை பார்க்க சென்றுவிடுவேன் . அந்த வகையில் இந்த படம் என்னை மிகவும் பாதித்தது என்றே கூறலாம். நீங்கள் சிறிய வயதாய் இருக்கும் போது நீங்கள் எத்தனை தவளைகளையும் , வண்ணத்துபூச்சிகளையும், தட்டான்களையும் பிடித்து கொடுமை படுத்திருப்பீர்கள்? அதை நினைத்து என்றாவது வருத்த பட்டதுண்டா? அப்படியானால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த படத்தின் வசனத்தை ஒரு A4 தாளில் எழுதி விடலாம் அந்தளவுக்கு மிகக்குறைந்த வசனங்களே இந்த படத்தில் இருக்கும். இந்த படம் நான்கு  பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்க்க வேண்டிய படங்களில் இது மிக முக்கிய ஒன்றாகும்.


ஸ்ப்ரிங் (வசந்த காலம்)
       கொரியாவில் மலைகளுக்கு நடுவே உள்ள  ஒரு ஏரியில் ஒரு சிறு படகு வீட்டில்   புத்த துறவியும் அவரது சிறு சீடனும் வசித்துவருகின்றனர். அந்த சிறுவனுக்கு வாழ்வியலின் நோக்கத்தையும், மருத்துவமுறைகளையும் குரு கற்றுகொடுக்கிறார் . சிறுவர்களுக்கே உரிய குறும்பு தனத்தோடு அந்த சிறுவன் தவளையின் வாயில் கல்லை திணிக்கிறான், மீனை பிடித்து அதன் உடம்பில் கல்லை கட்டுகிறான் , பாம்பை பிடித்து அதன் கழுத்தில் கல்லை கட்டுகிறான் . அவை துன்பப்படுவதை பார்த்து சிரிக்கிறான் . குரு எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவன் தூங்கும் போது கல்லை கட்டிவிடுகிறார். மறுநாள் கல்லை எடுத்துவிடுமாறு கெஞ்சும் சிறுவனிடம் நீ துன்பப்படுத்திய எல்லா உயிரினங்களையும் விடுவித்தால்தான் உனக்கு விடுதலை என்கிறார் . அப்படி நீ காப்பாற்ற முடியாவிட்டால் நீ பாவம் என்னும் கல்லை உன் வாழ்னால் முழுக்க வேண்டியிருக்கும் என்கிறார். சுமக்க அவனால்  தவளையை மட்டுமே காப்பாற்ற முடிகிறது மற்றவை இறந்து விடுகிறது. தன் தவறை அவன் உணர்தாலும் அவனால் ஏதும் செய்ய முடிவதில்லை .

        இந்த பகுதியை பார்த்தவுடன் நான் சிறு வயதில் செய்த அத்தனை செயல்களும் என்னை  அன்று இரவு தூங்கவிடாமல் செய்தது. ஏனனில்  நான் அப்போதுதான் விலங்குகளை நேசிக்க ஆரம்பித்திருந்தேன். 


சம்மர்(கோடை காலம் )



இப்போது அந்த சிறுவன் பெரியவனாக காட்டப்படுகிறான். அந்த படகு இல்லத்துக்கு ஒரு நோய்வயப்பட்ட  இளம்பெண்ணும், அவளது  தாயாரும் வருகின்றனர். அவள் குணமாகும் வரை அங்கேயே இருக்க குரு  பணிகிறார். அந்த பெண்ணின் தாய் அவளை குணமானவுடன் அழைத்து செல்வதாய்  கூறிவிட்டு செல்கிறாள். சீடன் அந்த பெண்ணின் மீது மையல் கொள்வதாக காட்டப்படுகிறது. குருவுக்கு தெரியாமல் இவர்கள் நெருங்கி பழக ஆரம்பிக்கின்றனர். இந்த இடங்களை இயங்குனர் எந்த விரசமமும் இல்லாமல் காட்டியிருப்பார் . ஆனால்  இந்திய சினிமாவாக இருந்திருந்தால், இதை வைத்தே இந்திய சினிமா அந்த படத்தை ஒரு பலான படமாக மாற்றியிருக்கும்.  இதையெல்லாம் அறிந்த குரு அந்த பெண் குணமாக அவன் செய்ததும் ஒரு மருத்துவமே எனக்கூறி, அவளை வெளியேற்றிவிடுகிறார். அந்த சீடனும் இரவோடு இரவாக அங்கிருக்கும் புத்தர் சிலையோடு அவளை தேடி சென்று விடுகிறான்.   
 
       நேரமின்மை காரணமாக இந்த பதிவின் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும்.
















Wednesday, November 7, 2012

எல்லோருக்கும் வணக்கம் - முதல் பதிவு

என்னோட பெயர்  ராம்குமார் , தஞ்சை தரணியின் கடைகோடியிலிருந்து வருகிறேன். இன்று முதல் நான் பார்த்தது, என்னை கவர்ந்தது, என்னை பாதித்தது என அனைத்தையும் பதிவிடலாம் என எண்ணுகிறேன் 

ஏற்கனவே இருக்குறவங்களோட  தொல்லை தாங்க முடியல, இதுல இவன் வேற எழுத  ஆரம்பிச்சிட்டானா? இப்புடியெல்லாம் நீங்க நினைக்க கூடாது . அப்புறம் நாங்கல்லாம் எப்புடி வளர்றது ? 

சரி என்னை பற்றி அதிக தகவல்களை அடுத்த பதிவுல போடுறேன் .  


மீண்டும் சந்திப்போம்